

தாய்லாந்தில் வாள்வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பள்ளி மாணவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா உள்பட 30 நாடுகள் கலந்துக் கொண்டன. இந்த போட்டியில் இந்தியா சார்பில் சென்னை ஒட்டேரியை சார்ந்த ஸ்ரீ சரவணன் என்ற 11ம் வகுப்பு மாணவர் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்றார். தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த ஸ்ரீ சரவணனுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், தமக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.