பெண் காவலரை அரிவாளால் வெட்டிய முதியவர் | தேனியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்டம் கம்பத்தில் பெண் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்த அம்பிகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவரை குபேந்திரன் என்ற 60 வயது முதியவர் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பித்து ஓடியுள்ளார். படுகாயமடைந்த அம்பிகாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவரது கண்ணிற்குச் செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தப்பியோடிய குமேந்திரனை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தியதில், நடை பாதை பிரச்சனையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு குபேந்திரன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
