பெண் காவல் ஆய்வாளர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

x

சென்னையில் பெண் காவல் ஆய்வாளர், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் ரேணுகா தேவி, வழக்கு ஒன்றில் அறிக்கை தயாரித்தபோது தவறு செய்தது தொடர்பாக குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் கண்டித்ததாகவும், பணிமாறுதல் கடிதம் கொடுக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரேணுகாதேவி தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்