சாலையோரத்தில் இறந்து கிடந்த பெண் சிறுத்தை குட்டி

x

கொடைக்கானல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பெண் சிறுத்தை குட்டி உயிரிழந்தது. கொடைக்கானல் அருகே டம்டம் பாறை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. சாலை ஓரத்தி இறந்து கிடந்த சிறுத்தை குட்டி குறித்து சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் தகவலின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குப் பின், அதன் உடலை எரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்