சாக்கில் கட்டிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சிசு...

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள பன்னீர் செல்வம் என்பவரின் வீட்டின் அருகே ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது.
சாக்கில் கட்டிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சிசு...
Published on
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள பன்னீர் செல்வம் என்பவரின் வீட்டின் அருகே ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. பன்னீர்செல்வம் அதனை திறந்து பார்த்த போது அதில் பச்சிளம் குழந்தை எறும்பு கடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த குழந்தை அரியலூர் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவ குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com