சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டத்தில், பெண் காவலர் மீது தாக்குதல்

சிவகாசி அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டத்தில், பெண் காவலர் மீது தாக்குதல்
Published on

சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டத்தில், பெண் காவலர் மீது தாக்குதல்

சிவகாசி அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை அருகிள் உள்ள ராயபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி துலுக்கப்பட்டியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்த போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதை தடுக்க முயன்ற போது போராட்டகார‌ர்களுடன் ஏற்பட்ட கைகலப்பில் கீர்த்திகா என்ற காவலர் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை, சக போலீசார் மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com