முன்னாள் காதலன் மிரட்டலால் பெண் இன்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

முன்னாள் காதலன் மிரட்டலால் பெண் இன்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

முன்னாள் காதலன் மிரட்டலால் பெண் இன்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 24 வயது மென்பொருள் இன்ஜினீயர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்குத் திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில், கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது, இவரின் முன்னாள் காதலன் எனக் கூறப்படும் வருண் என்பவர், பெண்ணின்ஆபாசப் படங்களைச் சமூக வலைதளங்களிலும் அவரது கணவருக்கும் அனுப்பித் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், பெற்றோர் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்..

இதில், 80 சதவீத தீக்காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தான் இறப்பதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதத்தில், தனது இந்த விபரீத வருண்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துக் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வருணைத் தேடி வருகின்றனர்.

#suicide #Femaleengineer #abuse #threat #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com