பெண் டாக்டர் தற்கொலை- கணவர் சிறையில் அடைப்பு

x

சென்னையில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரக்கோணத்தைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவி ஹாரூல் சமீராவும், டாக்டர் அசாருதீனும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து முகப்பேரில் வசித்து வந்தனர். இந்த நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக சமீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இந்த புகாரில், அசாருதீன் மற்றும் அவரது தாய், தந்தை கைது செய்யப்பட்டனர். இதில் தாய், தந்தைக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அசாருதீன் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்