கையும் களவுமாக சிக்கிய பெண் பில் கலெக்டர் - கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் சொத்து பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற பெண் பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரிக்கு, அவரது தந்தை துரை கண்ணன் வழங்கிய வீட்டு தீர்வை பெயரை மாற்றம் செய்வதற்கு செல்வகுமார் நகராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது பில் கலெக்டராக உள்ள நவீனா, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்த நிலையில், அவர்களது அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை செல்வகுமார் வழங்கி உள்ளார். அதனை பெற்றபோது பில் கலக்டர் நவீனாவை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
