விஜய் பிறந்தநாளையொட்டி மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விருந்து

x

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி, த.வெ.க நெல்லை வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முகமது கனி ஏற்பாட்டில், பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அமைந்துள்ள பிஷப் சார்ஜென்ட்

மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில், விஜய் நீடூழி வாழ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர்

அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு மாணவர்கள் மற்றும் இல்லத்தில் தங்கியுள்ள பெரியவர்களுக்கு

காலை விருந்தாக இட்லி, கேசரி, பொங்கல், வடை என பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டன. நெல்லை வடக்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான், மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான்,

வடக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முகமது கனி, இணை அமைப்பாளர் இன்பண்ட், பொருளாளர் தாரிக் மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்