தேர்வில் தோல்வி பயம் - பிளஸ்-2 மாணவி தற்கொலை/தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்த மாணவி தற்கொலை
பாபநாசத்தில் +2 மாணவி எழுதிய தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் தூக்கு போட்டு தற்கொலை.....
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவில் வசித்து வந்த புண்ணியமூர்த்தி மகள் ஆர்த்திகா வயது 17. இவர் பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் +2 படித்து தேர்வு எழுதி இருந்தார்.
இந்நிலையில் ஆர்த்திகா +2 தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தன் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் பெற்றோர்கள் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆர்த்திகாவின் தந்தை புண்ணியமூர்த்தி வயது 42 கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆர்த்தியாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
+2 தேர்வு முடிவு வெளியாவதை ஒட்டி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியது.
