தேர்வில் தோல்வி பயம்? - பிளஸ் 2 மாணவி தற்கொலை

x

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்