ஐ.ஐ.டி இயக்குநரின் காரை முற்றுகையிட்ட மாணவர்கள் : பாத்திமா தற்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.ஐ.டி இயக்குநரின் காரை முற்றுகையிட்ட மாணவர்கள் : பாத்திமா தற்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அம்பேத்கர் - பெரியார் படிப்பக இயக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தியின் காரை முற்றுகையிட்டு மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பாஸ்கர மூர்த்தி அறிவுறுத்தலின் பேரில், மாணவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு திரும்பிசென்றனர். இதனை தொடர்ந்து, ஐ.ஐ.டி இயக்குநர் காரில் புறப்பட்டு சென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com