பேசி கொண்டிருக்கும் போதே கத்தியை எடுத்து மகனின் கழுத்தில் சொருகிய தந்தை.. உசிலம்பட்டியில் அதிர்ச்சி
பெற்ற மகனையே குத்திக் கொன்ற தந்தை
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக, மதுபோதையில் பெற்ற மகனையே குத்திக் கொன்ற தந்தையால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துள்ளுக்குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் பாண்டி. இவரது தந்தை மாரியப்பன். இருவருமே மது போதையில் இருந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தந்தை, தான் வைத்திருந்த கத்தியால் மகனின் கழுத்தில் குத்தியதில் மகன் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
