மருமகளுடன் தகாத உறவில் இருந்த மாமனார்.. ஆற்றில் கொன்று புதைத்த மகன்.. பகீர் சம்பவம்...!
மனைவியுடன் தவறான உறவில் இருந்த தந்தையை கொலை செய்த மகன், மாமனாருடன் சேர்ந்து உடலை பாலாற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புளிபரங்கோயில் கிராமத்தில் பாலாறு கரை ஓரம் மணலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், இறந்து கிடந்தவர் செங்கல் சூளையில் வேலை செய்த சங்கர் என்பதும், இவர் தனது மருமகளுடன் தவறான உறவில் இருந்ததும் தெரியவந்தது.. இதனால் ஆத்திரமடைந்த சங்கரின் மகன் முருகன் சங்கரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இது குறித்து தனது மாமனார் ரவியிடம் தெரிவித்த நிலையில் இருவரும் சேர்ந்து சங்கரின் உடலை பாலாற்றில் புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து முருகன் மற்றும் ரவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
