ஆம்பூரை அடுத்த குப்ப ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர். இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 6-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இருவரின் பெற்றோரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை பெண் வீட்டார் ஏற்க மறுத்து திரும்பி சென்றனர். இந்நிலையில், அர்ச்சனாவின் தந்தை சரவணன், தனது மகள் இறந்து விட்டதாக கூறி கிராமம் முழுவதும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.