மகள் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை - திருத்தணியில் சோகம்
திருத்தணியில் மகள் கண்முன்னே லாரியின் சக்கரத்தில் சிக்கி தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மகளை மருமகன் வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது ரயில்வே சுரங்க பாதையை கடந்த அவர்கள் மீது, எதிர் திசையில் வேகமாக வந்த பைக் மோதியது.
இதனால் சாலையில் தூக்கி வீசப்பட்ட முதியவர் மீது லாரி ஏறி இறங்கியதால், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழே விழந்ததில் லேசான காயமடைந்த பெண், தந்தையின் உடலை மடியில் கிடத்தி வைத்தபடி கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
