Salem Murder | பெற்ற மகளின் கழுத்தை கரகரவென அறுத்து விட்டு ரத்தத்துடன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற தந்தை

#Salem | #Murder | #MurderMystery | #Crime | #TNpolice | #ThanthiTV Salem Murder | பெற்ற மகளின் கழுத்தை கரகரவென அறுத்து விட்டு ரத்தத்துடன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற தந்தை - சேலத்தில் பகீர் சம்பவம் சேலம் அருகே மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற தகப்பனே கழுத்தை அறுத்து கொலை செய்தது பதைபதைக்க வைத்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், பெற்ற மகளையே, தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், பகுதி நேரமாக கசாப்புக் கடைகளில் ஆடுகளை வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மகள் பிரத்யங்கிராதேவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் என்பவருடன் திருமணமாகி, ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. பிரத்யங்கராதேவியின் கணவர் கண்ணன் சேலத்திலேயே தங்கி வேலை செய்து வரும் நிலையில், பிரத்யங்கராதேவி அவ்வப்போது சேலத்திற்கு சென்று கணவரை பார்த்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த செல்வராஜ், அவரை வீட்டிற்கு வரவழைத்து ஆடு அறுக்க பயன்படுத்தும் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், பேத்தி உடன் சென்று வாழப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com