பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை - "1 இல்ல, 5 கொ*லகள்" - அதிர வைத்த மனைவியின் வாக்குமூலம்
Andhra | பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை - "1 இல்ல, 5 கொ*லகள்" - அதிர வைத்த முன்னாள் மனைவியின் வாக்குமூலம்
ஆந்திராவில் சொத்தில் பங்கு கொடுக்க விருப்பம் இல்லாமல் மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்படுள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டலகூடம் கிராமத்தை சேர்ந்த புக்கையா வெங்கடேஸ்வரலு நாயக் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தனது மகனான மங்கியா நாயக் உடன் வசித்து வந்துள்ளார். பின்னர் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மனைவின் மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மங்கியா நாயக்கை அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த முதல் மனைவி கோட்டேஸ்வரம்மா செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய இளைய மகன், தங்கை, தாய், தந்தை ஆகியோரை முன்னாள் கணவர் தான் கொலை செய்தார் என்றும், மூத்த மகனை கொலை செய்ததுடன், இதுவரை ஐந்து கொலைகளை செய்துள்ளார் எனவும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்து இன்னும் மூன்று பேரை கொலை செய்வேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
