Nellai | தந்தை, மகன் செய்த வேலை - தட்டி தூக்கிய போலீஸ்

தந்தை, மகன் செய்த வேலை - தட்டி தூக்கிய போலீஸ்

Nellai | தந்தை, மகன் செய்த வேலை - தட்டி தூக்கிய போலீஸ்

#nellai #arrest #thanthitv

நெல்லை மாவட்டம் பணகுடியில், நள்ளிரவில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் மூன்று கார்களை அடித்து நொறுக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். லுத்தர் சர்ச் தெருவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் பாகங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகியோர் மதுபோதையில் வாகனங்களைச் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com