பிரபல ஹோட்டல் பிரியாணி ஏற்பட்ட கதி... 13 பேர் ஹாஸ்பிடலில்... அதிர்ச்சி சம்பவம்

x

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை அன்று பிரியாணி வாங்கி சாப்பிட்ட கடையம் பகுதியை சேர்ந்த மாடசாமி குடும்பத்தினர் 9 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், அதே உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பாவூர்சத்திரம் அடுத்துள்ள குருசாமிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உடல் உபாதை பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில்,

உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாத காரணத்தினால் தான் இது போன்ற பிரச்சனைகள் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்