காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்...

வீரசோழன் ஆற்றுக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்...
காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்...
Published on

காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்

மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஆடுதுறையை அடுத்துள்ள, மணஞ்சேரி தடுப்பணையிலிருந்து வீரசோழன் ஆற்றை வந்தடைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் காவிரி நீரை, உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கடைமடை வந்து சேர்ந்த காவிரி - வணங்கி வரவேற்ற பொதுமக்கள்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான நாகை மாவட்ட எல்லைக்கு வந்து சேர்ந்தது. குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு விக்ரமன் தலைப்பிற்கு வந்து சேர்ந்த காவிரி நீரை, பொதுப்பணித்துறையினர் மற்றும் ஏராளமான மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.

கேக் வெட்டி, இனிப்பு ஊட்டி மக்கள் மகிழ்ச்சி

இதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கிய பொதுமக்கள், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக உள்ள மேலையூர் கடையணைக்கு காவிரி நீர் வந்தபின், ஓரிரு தினங்களில் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com