Farmers | Thanjavur | தேங்கிய பல கோடி.." உடனடியா முதல்வர் தலையிடணும்.." - குமுறும் விவசாயிகள்
தேங்கிய பல கோடி.." உடனடியா முதல்வர் தலையிடணும்.." - குமுறும் விவசாயிகள்
அடங்கல் சான்று பெறமுடியாமல் விவசாயிகள் அவதி - நெல் மூட்டைகள் தேக்கம் வருவாய்த்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அடங்கல் சான்று (நெல் விற்பனை செய்வதற்கு தேவையான சான்று ) பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.. இதன் காரணமாக சம்பா பருவ நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. எனவே உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
