கலெக்டர் ஆபீசில் காய்கறிகளை வைத்து திதி கொடுத்த விவசாயிகள்... தஞ்சாவூரில் உச்சகட்ட பரபரப்பு

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம், ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் வாழை இலை போட்டு, பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் வைத்து திதி கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்

X

Thanthi TV
www.thanthitv.com