மனைவியை பாம்பு கடித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை

x

திருவாரூரில், மனைவி பாம்பு கடித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கொல்லாபுரத்தில் லலிதா என்பவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் லலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் மனைவியை பாம்பு கடித்ததால், மனமுடைந்த கணவர் நாகராஜ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் சிகிச்சையில் இருந்த லலிதா, தற்போது வீடு திரும்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்