கொலை மிரட்டலுக்கு பயந்து குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரங்கோட்டையை சேர்ந்த சத்யராஜ், தனது ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர் புகார் அளித்துள்ளார். இதனால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, ஆட்சியரகத்தில் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த காவலர்கள் தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்