Hosur | Kerala | TN Police | கேரளம் பதிவு எண் கொண்ட காரில் விவசாயி கடத்தல்.. ஓசூரில் அதிர்ச்சி

கேரளம் பதிவு எண் கொண்ட காரில் விவசாயி கடத்தல்.. ஓசூரில் அதிர்ச்சி

Hosur | Kerala | TN Police | கேரளம் பதிவு எண் கொண்ட காரில் விவசாயி கடத்தல்.. ஓசூரில் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அருகே விவசாயி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது அதனை தற்போது காணலாம்... ஓசூர் அருகே கெலமங்கலம் அடுத்த அனுசோனை கிராமத்தில் 58 வயதான கோபால், ஆடு, கோழி, முயல் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு கேரளம் பதிவு எண் கொண்ட காரில் வந்த 4 பேர், அவரை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை பார்த்த அவரது மனைவி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த சில நாட்களாக அந்த நபர்கள் சூட்டிங் நடத்த அனுமதி கேட்டு வந்ததாகவும் , அதற்கு கோபால் மறுப்பு தெரிவித்ததால் அவரை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com