Dindigul Farmer | பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு..விவசாயி திடீர் மரணம்
பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு..விவசாயி திடீர் மரணம்
#dindigul #farmer #thanthitv
பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு விவசாயி திடீர் மரணம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடைக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் நெல் வயலில், பக்கத்து வீட்டுக்காரரின் கோழிகள் பயிர்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், சின்னகருப்பன், சின்னையா உள்ளிட்ட மூவர் வெள்ளைச்சாமியைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.இதில் கற்கள் மீது விழுந்து இடுப்பு, முதுகுப் பகுதியில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில் இன்று காலை உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். உயிரிழப்புக்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
