திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு பயண கட்டண உயர்வு - இன்று முதல் அமல்.!

x

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதிக்குச் செல்லும் படகு பயண கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண பயணிகளுக்கான கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகை கட்டணம் 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 300 ரூபாய் சிறப்பு கட்டண படகில் எந்த மாற்றமும் இல்லை. இந்த கட்டண உயர்வு சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்