அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை

மாஸ்டர் பட இசை வெளியீட்டின் போது அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் என்று சுவரோட்டிகள் மூலம் அவரது ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை
Published on

நடிகர் விஜய் நடித்து திரைக்கு வர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது, வருமானவரித்துறை நடத்திய சோதனை குறித்து நடிகர் விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல், அரசியல் வருகை அறிவிப்பை வெளியிட கோரும் வகையில், மொத்த ஜனங்களின் ஒத்த எதிர்பார்ப்பு, அண்ணா உங்கள் குட்டி கதையால் அரசியல் வருகையை உறுதியாக்கு என்ற வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com