ரஜினியின் தர்பார் திரைப்படத்தை வரவேற்று சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. இதனிடையே ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தர்பார் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை உடை அணிந்து வருவதுபோல காவல்துறை உடையணிந்து ரசிகர்கள் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.