பிரபல தமிழ் கவிஞர் மறைவு - இறுதி அஞ்சலி குறித்து முதல்வர் போட்ட உத்தரவு

x

பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு

மறைந்த தமிழறிஞரும் கவிஞருமான கலைமாமணி கவிக்கோ

திரு.வாமு. சேதுராமன் அவர்கள் 04.07.2025 அன்று அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து, அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (05.07.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்துள்ளவர் பெருங்கவிக்கோ திரு.வா.மு. சேதுராமன் அவர்கள். மேலும், அவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பெருங்கவிக்கோ என்று அனைவராலும் அறியப்பட்ட மூத்த தமிழறிஞர் கலைமாமணி திரு.வா.மு. சேதுராமன் அவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.


Next Story

மேலும் செய்திகள்