பிடிபட்டது பிரபல ஊட்டி கொள்ளை கும்பல்..

x

இந்துஸ்தான் தொழிற்சாலையில் கைவரிசை - 7 பேர் கைது

ஊட்டி அருகே மூடப்பட்ட இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்து சில்வர் கலந்த மண் மற்றும் கற்களை திருடிய 2 கும்பலை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சமீப காலங்களாக தொழிற்சாலைக்குள் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், தொழிற்சாலைக்குள் நுழைந்து கைவரிசையை காட்டிய ஊட்டி சேர்ந்த பிரதீப் குமார், அகமதுல்லா ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடிய தலைகுந்தாவை சேர்ந்த அருண் பிரசாத், அஜித், நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். தொடர்ந்து வனத்துறையினர் தொழிற்சாலையை சுற்றி தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், கொள்ளையடிக்க வந்த மற்றொரு கும்பலான தலைகுந்தாவை சேர்ந்த வெங்கடேஷ், நாகராஜ், சந்தோஷ், ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்