பிரபல பெண் Producer-க்கு கொலை மிரட்டல்

பெண் திரைப்பட தயாரிப்பாளருக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மற்றொரு தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு ஆதரவாக, தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் ராஜேஷ்வரி என்பவர் ஆடியோ ஒன்றை பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தயாரிப்பாளர் ஈஸ்வரன் என்பவர் ராஜேஷ்வரிக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஈஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com