கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை - கிளம்பும் புது பகீர்

x

கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை - கிளம்பும் புது பகீர்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டதாக கூறி நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு கிளப்பியுள்ளார். 2018ல் MeToo இயக்கத்தின் மூலம் நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் மீது புகார் கூறியிருந்த

தனுஸ்ரீ, சமீபத்தில் அழுவது போன்று வீடியோ வெளியிட்டது சமூக வலைதளங்களில் விவாத பொருளானது. தற்போது பேட்டி அளித்துள்ள அவர், தாம் 2020ம் ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் உடன் படம் ஒன்றில் இருந்ததாக கூறினார். சுஷாந்தின் மரணத்திற்கும், தாம் எதிர் கொள்ளும் துன்புறுத்தலுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக கூறி பகிர் கிளப்பினார். இதேபோல், நடிகை பூஜா மிஸ்ராவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாக தனுஸ்ரீ கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக மும்பையில் தன்னை சுற்றி விசித்திரமான சம்பவங்கள் நடைபெற்றதாகவும், தனது உணவில் விஷம் கலக்க முயற்சிகள் நடந்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்