பட்டினப் பிரவேசம் - பல்லக்கில் தருமபுர ஆதீனம் வீதி உலா
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆதீன பட்டினப் பிரவேச விழாவில், ஆதீன மடாதிபதியை பக்தர்கள் பல்லக்கில் சுமந்து சென்றனர். அப்போது, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், தொண்டை மண்டலம் ஆகிய ஆதீன மடங்களின் மடாதிபதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வானவேடிக்கைகளுடன், தர்மபுரம் நாடாம்பாள் யானை மற்றும் திருக்கடையூர் அபிராமி யானை தலையை அசைத்தவாறு ஆதீனத்தை வரவேற்றது. நான்கு மாட வீதிகள் வழியே பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
Next Story
