கடன் தொல்லையால் விஷம் குடித்த குடும்பம் - மூவர் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடன் தொல்லையால் விஷம் குடித்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரிகள் முத்துலட்சுமி, மீனாட்சி ஆகியோர் வட்டிக்கு கடன் பெற்று அதனை திருப்பி தர முடியாததால், விஷம் குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
Next Story
