56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் குடும்ப கட்டுப்பாடு : அரசு மருத்துவரின் அலட்சியத்தால் அல்லாடும் பெண்மணி

மதுரை திருமங்கலத்தில் 56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் குடும்ப கட்டுப்பாடு : அரசு மருத்துவரின் அலட்சியத்தால் அல்லாடும் பெண்மணி
Published on
மதுரை திருமங்கலத்தில் 56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே மருதங்குடி கிராமத்தைச் சார்ந்த புனிதா, கருக்கலைப்பு செய்வதற்காக விருதுநகர் அரசு மருத்துவமனையை நாடியுள்ளார். அவருக்கு கருகலைப்பு செய்வதற்கு பதிலாக மருத்துவர்கள் குடும்ப கட்டுபாடு செய்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் புனிதாவிடம் தவறை ஒப்புக்கொண்ட நிலையில், சிசுவை கலைப்பதற்காக மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த புனிதா தனியார் மருத்துவமனையை நாடி வருகிறார். அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com