மகன் மீது பொய் வழக்கு - தற்கொலை செய்த தந்தை பேசிய ஆடியோ
கோவையில், தனது மகன் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்ததாக தந்தை தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், இறப்பதற்கு முன் போலீசாரை குற்றம்சாட்டி வேதனையுடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சேகர், கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, தன்னை ஒன்றும் செய்ய முடியாததால், தனது மகன் மணிபரத் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்ததாகவும், காவல்நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் சேகர் பேசிய ஆடியோ வெளியானது.
Next Story

