ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஒரு குழந்தையின் படம் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அந்த வீடியோவிலும், புகைப்படத்திலும் இருந்தது சுஜித் அல்ல என்று அந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தை சேர்ந்த முனிவேல், சுகன்யாவின் 2 வயது மகனான நித்திஷ் படங்களே சுஜித் என்ற பெயரில் பதிவாகி வந்துள்ளது. தங்கள் மகனின் படத்திற்கு அஞ்சலி செலுத்துவது போல வெளியான செய்திகளால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தவறாக பகிரப்பட்ட அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.