Cuddalore Police | "கெட்ட சக்தி இருக்கு.." சிக்கிய திருட்டு சாமியார்.. பந்தாடிய பொதுமக்கள்
விருத்தாசலத்தில் வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்று கூறி ஓராண்டுக்கு முன் தங்க செயினை பறித்து சென்ற போலி சாமியார், மீண்டும் அதே பாணியில் திருட முயன்றபோது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். கண்டியாங்குப்பத்தை தனலட்சுமியிடம் இருந்து ஒராண்டுக்கு முன் மயக்கமருந்து தடவி, செயின் மற்றும் நகைகள் திருடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர் கொம்பாடிக்குப்பத்தில் மீண்டும் திருட முயன்றபோது பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டார். அப்போது குடியிருந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். காயமடைந்த போலி சாமியாரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Next Story
