சென்னையில் தண்ணிகாட்டிய போலி காவலர்... சிக்கியதும் அதிரடி காட்டிய ரியல் போலீஸ்
சென்னை எண்ணூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்
மது போதையில் காரை ஓட்டி வந்தவர் காவலர் என கூறியிருக்கிறார்
விசாரணை செய்ததில் போலி அடையாள அட்டையை வைத்து காவலர் எனக் கூறியது தெரிய வந்தது
தப்பிச் சென்ற இளைஞரை எண்ணூர் போலீசார் விரட்டி பிடித்தனர்
சென்னை எண்ணூர் பகுதியில் நேற்று இரவு எண்ணூர் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்
அந்த காரில் வந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவரை விசாரணை செய்ததில் நான் காவலர் என கூறியிருக்கிறார்
சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் அடையாள அட்டையும் காரின் பதிவு எண்ணையும் கொண்டு சோதனை செய்ததில் இரண்டும் போலி என்றும் காரின் உண்மையான பதிவு எண் கொண்ட நம்பர் பேட் காரின் உள்ளே இருந்தது தெரியவந்தது
உடனடியாக அந்த காரில் இருந்த நபர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி இருக்கிறார் அவரை துரைத்துச் சென்று போலீசார் பிடித்துள்ளனர்
மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அந்த இளைஞரின் பெயர் ரவிக்குமார் என்பதும் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் வசித்து வருபவரும் என்றும் லோன் போட்டு வாங்கிய காரின் தவணை கட்ட முடியாத காரணத்தினால் போலி நம்பர் பிளேட் வைத்து சுற்றி சுற்றித்திரிந்ததாகவும்
கீழே கிடைத்த வேறு ஒரு காவலரின் அடையாள அட்டையை வைத்து போலியாக போட்டோ வைத்து தனக்கென ஒரு அடையாள அட்டை செய்ததாகவும்
மது போதையில் எங்கேயாவது சிக்கிக் கொண்டால் அதைக் காண்பித்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணி செய்ததாக கூறினார்
மேலும் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்
