Fake police | சென்னையில் சிக்கிய போலி போலீஸ்..பூக்கடை பகுதியை அதிரவைத்த சம்பவம்
சென்னை பூக்கடை பகுதியில் நரேஷ்குமார் என்பவரிடமிருந்து போலீஸ் என கூறி, 55 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே அன்பரசி, விமல் அபிஷேக் ஞானஷாம், காயத்ரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அன்வர்தீன், பாவா ஆகியோரும், சென்னை சென்ட்ரலில் ரூபன் சக்ரவர்த்தி என்பவரும் போலீசாரிடம் சிக்கினர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமுறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
