புருஷனை பங்கு போட்ட அக்கா.. பிள்ளைகளோடு சேர்ந்து சங்கறுத்த தங்கச்சி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தனது கணவருடனான தகாத உறவை கைவிட மறுத்த அக்காவை, தங்கை உள்ளிட்டோர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், தனது 3 பிள்ளைகளோடு வசித்து வந்த ஒரு பெண், தனது தங்கையின் கணவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, எவ்வளவோ கண்டித்தும் கேட்காத ஆத்திரத்தில் அப்பெண்ணின் தங்கை தனது 17 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள், தம்பியுடன் சென்று அக்காவுடன் வாக்குவாதம் செய்த போது மோதல் முற்றியுள்ளது. அப்போது தங்கை தரப்பினர் தாக்கியதில், அவரது சகோதரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தங்கை மற்றும் தம்பியை கைது செய்த போலீசார், அவரது 2 மகன்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.
Next Story
