வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் டி.எம்.கோட்டையை சேர்ந்த முனீஸ்வரன், கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 பேரிடம் மொத்தம் 54 லட்சம் ரூபாய் பணம் வசூலித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் கைது
Published on
ராமநாதபுரம் மாவட்டம் டி.எம்.கோட்டையை சேர்ந்த முனீஸ்வரன், கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 பேரிடம் மொத்தம் 54 லட்சம் ரூபாய் பணம் வசூலித்துள்ளார். பின்னர் முனீஸ்வரன் வழங்கிய விசா போலி என தெரிய வந்தது. பணம் கொடுத்தவர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே மணல்மேடு கணக்கன் குடியை சேர்ந்த 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com