

தேனி கனரா வங்கியில் நகை கடன் அடமான விவகாரத்தில் 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த செந்தில் என்பவர், போலி நகைகளை போலி நபர்களை வைத்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதை அறிந்த வங்கி மேலாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். இந்த வழக்கில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து, நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் உடந்தையாக இருந்த வினோத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.