போலியாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளங்களை கண்காணிக்க திட்டம்

சமூக வலைதளங்களில் போலியாக வதந்திகளை பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலியாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளங்களை கண்காணிக்க திட்டம்
Published on

சமீபத்தில் வீட்டிற்கு நேரடியாக ரத்தப் பரிசோதனை செய்ய யாரேனும் வந்தால் அவர்கள் எச்ஐவி நோயை பரப்புபவர்கள் என ஒரு வதந்தி பரவியது. அதே போல் சென்னை காவல் துறையின் லோகோவை பயன்படுத்தி வடமாநில கடத்தல் கும்பல், குழந்தைகளை கடத்துவதாக செய்திகள் பரவின. இது போன்ற வதந்திகள் தொடர்பாக விசாரணை நடத்தி , வதந்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். வதந்தியாக பரப்பப்படும் செய்திகளை கண்காணித்து அதை பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com