சென்னை வேளச்சேரி தரமணி மெயின் சாலையில் டான்சி நகரில் உள்ள ஸ்கேன் சென்டரில் சட்ட விரோதமாக பரிசோதனை செய்து பிறக்க போகும் குழந்தையின் ஆணா? பெண்ணா? என முன்கூட்டியே தெரிவித்து பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்ய மருத்துவரிடம் அனுப்பி வைப்பதாக மருத்துவ துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மருத்துவ துறை அதிகாரிகள் ஒரு கர்ப்பிணி பெண்ணை அனுப்பி சோதனை செய்தனர். அப்போது, புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த போலீசார், அதனை நடத்தி வந்த போலி டாக்டர் சிவசங்கரனையும் கைது செய்தனர் . எம்எஸ்சி பட்டதாரியான அவர் , கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் மருத்துவமனை துவங்கியுள்ளார். முதலில் மருத்துவர்களை வைத்து மருத்துவ மனை நடத்திய அவர் பின்னர் , தாமே அந்த மருத்துவ மனையை நடத்தி வந்துள்ளார்.