போலி சான்றிதழ் தயாரித்தவர் கைது : தலைமறைவானவரை தேடும் பணி தீவிரம்

நெல்லையில், அரசு பணி இட ஒதுக்கீட்டிற்காக விளையாட்டு துறையினரால் பயன்படுத்தக்கூடிய படிவங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி சான்றிதழ் தயாரித்தவர் கைது : தலைமறைவானவரை தேடும் பணி தீவிரம்
Published on

நெல்லையில், அரசு பணி இட ஒதுக்கீட்டிற்காக விளையாட்டு துறையினரால் பயன்படுத்தக்கூடிய படிவங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழப்பாவூரை சேர்ந்தவர் கண்ணன் இவர் தனியார் செஸ் அகாடமி நடத்தி வருகிறார். இவரது அகடாமி மூலம் இட ஒதுக்கீட்டிற்கான, படிவம் நான்கை, போலியாக தயாரிக்கப்படுவதாக, மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.அதன்படி புகாரை விசாரித்த காவல்துறையினர் கண்ணனை அரசு ஆவணங்களை போலீயாக தயார் செய்து விநியோகம் செய்தல் ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து சான்றிதழ்கள், அதற்கு பயம்படுத்தக்கூடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் கண்ணனுக்கு உறுதுணையாக இருந்த நரேஷ்குமார் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com