Ammonia Gas | ஆலைக்கு சீல்.. சம்பளத்தை பெற்றுக்கெண்டு கதறி அழுத பெண் ஊழியர்கள்
ஆலைக்கு சீல்.. சம்பளத்தை பெற்றுக்கெண்டு கதறி அழுத பெண் ஊழியர்கள்
ஆலைக்கு சீல்.. சம்பளத்தை பெற்றுக்கெண்டு கதறி அழுத பெண் ஊழியர்கள்
திருவள்ளூர் அடுத்த பெரியபாளையத்தில் 18 உயிர்களை பலிவாங்கிய அமோனியா வாயுக் கசிவு விபத்தைத் தொடர்ந்து தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்த நிலையிலும், பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை தொழிற்சாலை நிர்வாகம் வழங்கியது. தொழிற்சாலையை பணியாற்றி பெண்கள் பலரும் சம்பளத்தை பெற்றுக்கொண்டபோது, இனி தங்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் எனக் கதறி அழுதனர். தொழிற்சாலையை நம்பி கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்ததாகவும், இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த காட்சி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
